"இளையராஜா எங்கள் சொத்து" - விஜய் சேதுபதி ஓபன்டாக்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது.
புதுச்சேரி,
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது.
வரும் மே 20 ஆம் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, காயத்ரி, சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய விஜய்சேதுபதி, தான் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகன் எனவும், இளையராஜா எங்கள் சொத்து என்றும் பேசினார். மேலும், இந்த திரைப்படத்திற்கு இளையராஜாவும் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருப்பது மகிழ்ச்சிகரமானது எனவும் தெரிவித்தார்.