ஏடாகூட கேள்விக்கு பிரியா பவானி ஷங்கர் பதிலடி

இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Update: 2022-04-17 08:29 GMT

தொலைக்காட்சியில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நடிகைகளில், பிரியா பவானி ஷங்கரும் ஒருவர். ‘மேயாதமான்', ‘கடைக்குட்டி சிங்கம்', ‘மான்ஸ்டர்', ‘ஓ மணப்பெண்ணே...' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதுதவிர ‘யானை', ‘பத்து தல', ‘திருச்சிற்றம்பலம்', ‘இந்தியன்-2' உள்பட 9 படங்களை கைவசம் வைத்துள்ளார். ஓய்வு நேரங்களில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு கலந்துரையாடலில் ரசிகர் ஒருவர், உங்கள் உள்ளாடை அளவு என்ன? என்று ஏடாகூடமான கேள்வியை கேட்டார். இதனால் பிரியா பவானி ஷங்கர் ஆவேசம் அடைந்தார்.

“34 டி சகோதரரே... என் உடல் உறுப்புகளை வேற்று கிரகத்தில் இருந்து வாங்கிக் கொண்டு வரவில்லை. உங்கள் வாழ்க்கையிலும் பெண்கள் இருக்கிறார்கள். உற்று பார்த்தால் உண்மை தெரியும்... வாழ்த்துக்கள்”, என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிலை ஆதரித்து திரை பிரபலங்களும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்