விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் டிரைலர் வெளியீடு..!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-16 15:40 GMT
சென்னை,

'தர்மதுரை' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம், அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம். சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மாமனிதன் திரைப்படம் வருகிற மே 20-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது மாமனிதன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்