வெப் தொடரில் தான்யா

நடிகை தான்யா ரவிச்சந்திரன் “பேப்பர் ராக்கெட்” வெப் தொடரில் நடிக்கிறார்.

Update: 2022-04-11 08:47 GMT
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சூர்யா, சரத்குமார், விஜய்சேதுபதி, சத்யராஜ், பிரசன்னா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியாமணி, மீனா உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை தான்யா ரவிச்சந்திரனும் வெப் தொடரில் நடிக்கிறார். இவர் சசிகுமார் ஜோடியாக பலே வெள்ளையத்தேவா, அருள் நிதியுடன் பிருந்தாவனம், விஜய்சேதுபதி ஜோடியாக கருப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதியுடன் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார்.

தான்யா நடிக்கும் வெப் தொடருக்கு பேப்பர் ராக்கெட் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் காளிதாஸ் ஜெயராம், ரேணுகா, கருணாகரன், கவுரி கிஷன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.

மேலும் செய்திகள்