சசிகுமார் நடிப்பில் கிராமத்து அதிரடி படம்

அதிரடி கிராமத்து படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

Update: 2022-04-08 09:42 GMT
என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண் மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவே இல்லை . அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து இளைஞராக சசிகுமார் நடிக்கும் புதிய படம், ‘காரி.’ இந்தப் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக பார்வதி அருண் நடிக்கிறார். 

இவர், ‘செம்பருத்தி பூ’, ‘21-ம் நூற்றாண்டு’ ஆகிய மலையாள படங்களை டைரக்டு செய்தவர். தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். வில்லனாக ஜே டி சக்கரவர்த்தி நடிக்க , டைரக்டர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், அம்மு அபிராமி, நாகிநீடு, பிரேம் ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.லட்சுமன் குமார் தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்