மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ராம்கோபால் வர்மா படத்தை திரையிட தடை
இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் லெஸ்பியன்ஸ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘காட்ரா’ என்ற ஹிந்தி படத்தை திரையிட மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.;
பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா. இவர் சூர்யா நடித்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ரத்த சரித்திரம் படத்தை இயக்கி உள்ளார். சந்தன வீரப்பன் வாழ்க்கையையும் படமாக்கி உள்ளார். சமீபகாலமாக ஆபாச கதையம்சம் உள்ள படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஓரின சேர்க்கையாளர் கதையை மையமாக வைத்து டேஞ்சரஸ் என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் நைனா கங்குலி, அப்சரா ராணி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது.
படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், டேஞ்சரஸ் படத்தை திரையிட மாட்டோம் என்று மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் அறிவித்து உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கண்டித்து ராம்கோபால் வர்மா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சுப்ரீம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டப்பிரிவின் கீழ்தான் படத்தை எடுத்து இருக்கிறேன். தணிக்கை குழுவும் ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதன்பிறகும் சில தியேட்டர் நிறுவனங்கள் படத்தை வெளியிட மறுப்பது ஓரின சேர்க்கையாளர் அமைப்புக்கு எதிரானது. அது மனித உரிமை மீறல்’’ என்று கூறியுள்ளார்.