விஜய்யின் 66-வது படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 66-வது படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

Update: 2022-04-05 08:44 GMT

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள  திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரித்துள்ளது .  பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய்  நடிக்கவுள்ளார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.  அதன்படி விஜய் 66 படத்தின் லுக் டெஸ்ட் ஷூட் சில நாட்களுக்கு முன்பு      முடிந்துள்ளதாகவும், படப்பிடிப்பு இந்த வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும்   தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்