விஷாலின் 34-வது படம்

விஷால் நடிக்க உள்ள 34-வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை முத்தையா டைரக்டு செய்ய இருப்பதாகவும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Update: 2022-03-31 09:38 GMT
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது லத்தி, துப்பறிவாளன்-2, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. லத்தி படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இது போலீஸ் கதை, துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் விலகியதால் விஷாலே அந்த படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து நடிக்க உள்ள ‘மார்க் ஆண்டனி’ விஷாலுக்கு 33-வது படம். 

இந்நிலையில், விஷால் நடிக்க உள்ள 34-வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை முத்தையா டைரக்டு செய்ய இருப்பதாகவும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஷால் நடித்து 2016-ல் வெளியான மருது படத்தை முத்தையா இயக்கி இருந்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இது அதிரடி சண்டை படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்