போபால் மக்கள் பற்றி சர்ச்சை கருத்து? - ”தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்பட டைரக்டர் மீது போலீசில் புகார்

போபாலைச் சேர்ந்தவன் என்று சொன்னால், ஓரினச் சேர்க்கையாளர் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்படும் என்று கூறிய ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-28 09:31 GMT
பிரபல இந்தி இயக்குனர் விவேக் அக்னி கோத்ரி. இவர் 1990-ல் காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்கள் வெளியேறிய சம்பவத்தை மையாக வைத்து டைரக்டு செய்த தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு சில மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. 

இந்நிலையில் விவேக் அக்னிகோத்ரி சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘’நான் போபாலை சேர்ந்தவன். ஆனால் அதை வெளியே சொல்வது இல்லை. பொதுவாக போபாலை சேர்ந்தவர் என்றால் ஓரின சேர்க்கையாளர் என்ற கருத்து உள்ளது என்று சர்ச்சையாக பேசி இருந்தார். இதற்கு மத்திய பிரதேசத்தில் எதிர்ப்பு கிளம்பியது. விவேக் அக்னி கோத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இந்நிலையில் விவேக் அக்னி கோத்ரி மீது நடவடிக்கை எடுக்கும்படி போபாலை சேர்ந்த ரோகித் பாண்டே என்பவர் மும்பையில் உள்ள வெர்சோவா போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்