கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்தில் விக்ரமன் மகன் கதாநாயகன்
கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்தில் இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்காவை கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார்.
டைரக்டராகவும், நடிகராகவும் இருந்த கே.எஸ்.ரவிகுமாரை ‘தெனாலி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்த்தியவர், கமல்ஹாசன். ‘தெனாலி’ படத்தை தயாரித்த கே.எஸ்.ரவிகுமார் 20 வருட இடைவெளிக்குப்பின், ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். இதில் கே.எஸ்.ரவி குமார், தர்சன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன் ஆகியோருடன் ஒரு ‘ரோபோ’வும் நடித்து இருக்கிறது. சபரி கிரிசன், சரவணன் ஆகிய இருவரும் இயக்கியிருக்கிறார்கள்.
‘கூகுள் குட்டப்பா’ படவிழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:-
‘‘இது, ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற மலையாள படத்தின் தழுவல். டைரக்டர்கள் இருவரும் என் உதவியாளர்களாக இருந்தாலும் படப்பிடிப்பின்போது என்னை தயாரிப்பாளராக பார்க்காமல், நடிகராக வேலை வாங்கியது வியப்பை அளித்தது.
‘கூகுள் குட்டப்பா’ படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில், அறிமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில், இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்காவை கதாநாயகனாக அறிமுகம் செய்ய இருக்கிறேன்’.’
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.