வடிவேலுவுக்கும், சூரிக்கும் என்ன வித்தியாசம்?

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலுவுக்கும், சூரிக்கும் மதுரைதான் சொந்த ஊர்.

Update: 2022-03-21 00:59 GMT
இருவருமே ஏழை நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள். இரண்டு பேருக்குமே சினிமாவுக்கு வருவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. 

இருவருக்கும் குழந்தை ரசிகர்கள் அதிகம். நகைச்சுவை நடிகராக பிரபலமாகி கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள். வடிவேல் 2 படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பது போல், சூரியும் 2 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இருவருமே நாள் கணக்கில் சம்பளம் (சில லட்சங்கள்) வாங்கி வருகிறார்கள். தயாரிப்பாளர், டைரக்டர் ஆகிய இருவரையும் பொருத்து சம்பளத்தை கூட்டி - குறைத்துக் கொள்கிறார்கள். வடிவேல் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை வீடுகளாகவும், தோட்டங்களாகவும் வாங்கியிருக்கிறார்.

சூரி, ‘அம்மன் டீ ஸ்டால்’ என்ற பெயரில், மதுரையில் 6 டீக்கடைகளை ஆரம்பித்தார். இப்போது, ‘அம்மன் உணவகம்’ என்ற பெயரில், சைவம் மற்றும் அசைவ ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். மதுரையில் உள்ள தனது தோட்டத்தில், 6 மாடுகளை வளர்த்து வருகிறார்.

இருவருமே ‘இன்னோவா’ கார்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இரண்டு பேரும் மதுரைக்கு பறந்து விடுகிறார்கள்.

மேலும் செய்திகள்