மார்ச் 25ம் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது 'வலிமை' திரைப்படம்

மார்ச் 25ம் தேதி' வலிமை ஓடிடி-யில்' வெளியாகிறது

Update: 2022-03-20 17:18 GMT
சென்னை,

நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த வலிமை படம் கடந்த  பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து இருந்தது. ஆனால் அதை தாண்டி படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டி உள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கிய இப்படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா  வில்லனாகவும் நடித்திருந்தனர். 

இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஜீ5 தளத்தில் வருகிற மார்ச் 25ம் தேதி' வலிமை ' வெளியாகும் என   அந்த நிறுவனம் அறிவித்துள்ளது 

மேலும் செய்திகள்