சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் புதிய அப்டேட்..!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கிறார் சூர்யா.
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன், திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி க்கொண்டிருக்கிறது .இதனை தொடர்ந்து அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கிறார் சூர்யா. வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது.
இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் இன்று தொடங்கியுள்ளனர் .