படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதாக அறிவிப்பு: துல்கர் சல்மான் படங்களுக்கு தியேட்டர் அதிபர்கள் தடை

சல்யூட் படத்தை ஓ.டி.டியில் வெளியிடும் துல்கர் சல்மானை கண்டிக்கும் வகையில், அவரது படங்களை இனிமேல் தியேட்டர்களில் திரையிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-03-17 11:32 GMT
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். துல்கர் சல்மான் தற்போது சல்யூட் என்ற மலையாள படத்தில் நடித்து தயாரித்து உள்ளார். 

இதில் நாயகியாக இந்தி நடிகை டயா பெண்டி நடித்துள்ளார். இதில் துல்கர் சல்மான் போலீஸ் அதிகாரியாக வருகிறார். படப்பிடிப்பு முடிந்து கடந்த பொங்கல் பண்டிகையில் தியேட்டர்களில் சல்யூட் படம் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். 

ஆனால், கொரோனா பரவல் காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில், சல்யூட் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இருப்பதாக துல்கர் சல்மான் சமூக வலைத்தள பக்கத்தில் திடீரென்று அறிவித்து உள்ளார். இது கேரள திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சல்யூட் படத்தை ஓ.டி.டியில் வெளியிடும் துல்கர் சல்மானை கண்டிக்கும் வகையில், அவரது படங்களை இனிமேல் தியேட்டர்களில் திரையிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளனர். அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்