‘நண்பா’ படத்தில் 3 காதல் ஜோடிகள்
‘நண்பா’ படத்தில் 3 காதல் ஜோடிகளை பற்றிய கதை.
இணைபிரியாத 3 நண்பர்கள் சாதி, மதத்தை தாண்டி, பணத்தை தாண்டி காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த மூன்று ஜோடிகளும் சில பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா, இல்லையா? அவர் களுக்கு இந்த சமூகம் உதவியதா? என்பதை புதுமுகங்களை வைத்து, ‘நண்பா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார், கே.வி.முகி. டி.சிவபெருமாள் தயாரித்துள்ளார்.
புதுமுகங்கள் பிரபு-மீனாவுடன் சிசர் மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.