15 கோடி பார்வையாளர்களை கடந்த பீஸ்ட் படத்தின் “அரபிக் குத்து” பாடல்..!

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் 15 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Update: 2022-03-09 17:29 GMT
கோப்புப்படம்
சென்னை, 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக அரபிக் குத்து அண்மையில் வெளியிடப்பட்டது. பட்டி தொட்டியெங்கும் கலக்கிவரும் அப்பாடல் யூடியூப்பில் அதிவிரைவில் 10 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் எனும் சாதனையையும் படைத்திருந்தது. 

திரைப்பிரபலங்கள் தொடங்கி பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி இணையதளங்களில் விடியோ பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக தனுஷின் ரவுடி பேபி பாடல் இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில் அரபிக் குத்து அதனை விரைவில் முந்தியது.

இந்நிலையில் அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் இதுவரை 15 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. முதல் பாடலே பெரும் கவனம் ஈர்த்துள்ளதால் இதன் மற்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அந்த வகையில், இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற 20ஆம் தேதி நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்