முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் உடன் இணையும் பாலிவுட் புகழ் ஆலியா பட்..!!
நடிகை ஆலியா பட் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
மும்பை,
பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாகியாக விளங்குபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘கங்குபாய் கத்தியவாடி’.
இதற்கு அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி இயக்கியுள்ள "ஆர்ஆர்ஆர்" திரைப்படத்தில் ஆலியா பட் , ஜூனியர் என்டீஆர் , ராமச்சரண் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் நடிகை ஆலியா பட் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கனவே ஹாலிவுட் திரையுலகத்தில் கலக்கி கொண்டு இருக்கும் ‘ஒண்டர் வுமன் ' புகழ் ஹால் கடோட் (Gal Gadot) மற்றும் '50 ஷேட்ஸ்' புகழ் ஜேமி டோர்னன் (Jamie Dornan) உடன் இணைந்து நடிக்க உள்ளார்.