‘‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க’’ என்று பாராட்டினார் நயன்தாராவை கவர்ந்த சமந்தா

நயன்தாராவும், சமந்தாவும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-04 06:48 GMT
கேரளாவைச் சேர்ந்த நயன்தாராவும், சென்னையைச் சேர்ந்த சமந்தாவும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒருவரையொருவர் பார்த்தது கிடையாது. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பின்போதுதான் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.

படப்பிடிப்பில் சமந்தா தொடர்பான காட்சிகள் படமாகும்போது, அதை நயன்தாரா பார்த்து ரசிக்கிறார். காட்சி முடிந்து இருக்கைக்கு வரும் சமந்தாவுடன் நயன்தாரா கைகுலுக்குகிறார். ‘‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க’’ என்று மனம் திறந்து பாராட்டுகிறார். பதிலுக்கு சமந்தாவும் சிரித்தபடி ‘நன்றி’ சொல்கிறார்.

இருவரும் நெருக்கமான தோழிகளாகி விட்டதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்