அம்மா வேடத்துக்கு மாறிய பூமிகா
நடிகை பூமிகா தற்போது கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழில் 2001-ல் விஜய் நடித்த பத்ரி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து ரோஜா கூட்டம் படத்தில் நடித்தார். பின்னர், சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் சேர்ந்தனர்.
களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். 2007-ல் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக பூமிகாவுக்கு கதாநாயகி வாய்ப்புகள் இல்லை. இதனால் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் தயாராகும் பட்டர்பிளை என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கு அம்மாவாக நடிக்கிறார். விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக வந்தவர் தற்போது, அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை ரசிகர்கள் பரபரப்பாக பேசுகின்றனர்.
தாய், மகள் பாசத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. தொடர்ந்து பூமிகாவுக்கு கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு அம்மா வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.