கதாநாயகர்களை விட கதாநாயகிகள் அதிர்ஷ்டசாலிகள் - நடிகை ராஷ்மிகா

கதாநாயகர்களை விட கதாநாயகிகள் அதிர்ஷ்டசாலிகள் என நடிகை ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில் கூறினார்.

Update: 2022-02-23 11:07 GMT
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காமரேட், அல்லு அர்ஜுனுடன் நடித்த புஷ்பா படங்கள் தமிழிலும் வந்தன. 

இந்த நிலையில், சினிமா அனுபவங்கள் குறித்து ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், “ரசிகர்களின் பாராட்டும் அன்பும் என்னைப்போன்ற கலைஞர்களுக்கு முக்கியம். சினிமாவில் ஹீரோக்கள் நிலைமைதான் கஷ்டமானது. படம் தோல்வி அடைந்தால், அது கதாநாயகிகளை அவ்வளவாக பாதிக்காது. காரணம் கதாநாயகிகள் ஒரே நேரத்தில் மூன்று நான்கு படங்களில் நடிக்கிறார்கள், ஆனால், கதாநாயகர்கள் நடிப்பில் ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும். 

அதில், ஒரு படம் ஓடாவிட்டாலும் இன்னொரு படத்தின் பலனுக்காக எதிர்பார்க்கும் வாய்ப்பு ஹீரோயின்களுக்கு இருக்கும். ஆனால், கதாநாயகர்கள் ஒரு ஆண்டு 2 ஆண்டு என உழைத்து ஒரு படம் தான் செய்கிறார்கள். அது தோல்வி அடைந்தால் தாங்குவது மிகவும் கஷ்டம். அந்த விஷயத்தில் கதாநாயகிகள் அதிர்ஷ்டசாலிகள், கதாநாயகிகள் அழகை காப்பாற்றிக் கொள்ள கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். அந்தந்த மொழிகளில் பேசத் தெரிய வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்