ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள 'கோல்மால்' படத்தின் அப்டேட்..!
நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து 'கோல்மால்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
சென்னை,
நடிகர் ஜீவா மற்றும் சிவா இணைந்து 'கோல்மால்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் பொன்குமரன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பயல்ராஜ்புட், தன்யா ஹோப், மாளவிகா, யோகிபாபு, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கோல்மால் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மொரிசியசில் வைத்து படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோல்மால் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பின் இறுதிநாளில் எடுத்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கோல்மால் திரைப்படத்தில் பிறரை ஏமாற்றி வாழும் கதாபாத்திரங்களாக நடிகர் ஜீவா மற்றும் சிவா நடித்துள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை படத்தின் தொடக்க முதல் முடிவு வரை காமெடியாக சொல்வது தான் கோல்மால் திரைப்படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
It’s a wrap 🎬♥️🧿#Golmaal
— paayal rajput (@starlingpayal) February 17, 2022
All good things comes to an end .. I can’t put in words how much I’m gona miss u all .
Had an amazing time shooting for #golmaal [ Tamil ]
Thank you for being a super awesome team 🙌🏻 pic.twitter.com/lGvm06BNEL