காதல் கதையில் விஜய் நடிக்க வேண்டும் - நடிகை மாளவிகா விருப்பம்

காதல் கதையில் விஜய் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் என நடிகை மாளவிகா தெரிவித்தார்.

Update: 2022-02-17 15:13 GMT
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தியிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். ரசிகர்களின் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்தால் எந்தமாதிரி படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் காதல் கதையம்சம் உள்ள படங்களில் விஜய்யை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சமீபகாலமாக அவர் காதல் படங்களில் நடிக்கவில்லை. விஜய் மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசையாக இருக்கிறது'' என்றார்.

தனுசுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டபோது, “அவர் ஒரு நல்ல வழிகாட்டி. நிறைய நடிப்பை கற்றுக்கொண்டேன்’’ என்றார்.

மேலும் செய்திகள்