'மகான்' படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!

'மகான்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

Update: 2022-02-14 00:22 GMT
சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மகான்'. இந்த திரைப்படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மகான் திரைப்படம் பிப்ரவரி 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. பலரின் கவனத்தை ஈர்த்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மகான் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் 'மகான்' படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் மகான் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அப்போது எடுத்த புகைப்படங்களை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும் செய்திகள்