நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்' பட டீசர் வெளியீடு

நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Update: 2022-02-11 21:30 GMT
பெங்களூரு:

நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார். 46 வயதிலேயே அவர் மறைந்தது கர்நாடக திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த கன்னடர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் கடைசியாக ‘ஜேம்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அந்த படத்தில் அவர் தனது காட்சிகளுக்கு குரல் கொடுக்க இருந்த நிலையில் மரணம் அடைந்தார்.

  இதையடுத்து புனித் ராஜ்குமாரின் காட்சிகளுக்கு அவரது மூத்த சகோதரர் சிவராஜ்குமார் குரல் கொடுத்துள்ளார். அந்த படத்தை அடுத்த மாதம் 17-ந் தேதி புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த டீசரை அவரது சகோதரர் ராகவேந்திர ராஜ்குமார் பெங்களூருவில் வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த படத்தை வசூலில் சாதனை படைக்க செய்வோம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். புனித் ராஜ்குமார் இறப்புக்கு பிறகு அவர் நடித்த படம் வெளியாக உள்ளதால் அதற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்