13 வருடங்களுக்குப் பிறகு பிரபு தேவா வடிவேலு கூட்டணி..!

13 வருடங்களுக்குப் பிறகு நடிகர் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்துள்ளனர்.

Update: 2022-02-09 18:08 GMT
சென்னை,

நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தில் வடிவேலு ஒரு சிறப்பு பாடலை பாடியுள்ளார். அந்த பாடலுக்கு நடன இயக்குனராக நடிகர் பிரபு தேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு ஜோடி 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது. 

மேலும் இந்த பாடலில் நடிகர் பிரபு தேவாவும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் செய்திகள்