‘‘நானும், டைரக்டரும் நிறைய சண்டை போட்டு இருக்கிறோம்’’ - கதாநாயகன் கண்ணீர்
ஒரு மனிதனுக்கு ஏற்படும் கனவை மையமாக வைத்து, ‘யாரோ’ என்ற திகில் படம் தயாராகி இருக்கிறது. சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், வெங்கட் ரெட்டி கதாநாயகனாக நடித்து, படத்தை தயாரிக்கிறார். படத்தைப் பற்றி அவர் கூறுகையில்...
‘‘இது ஒரு திகில் படம். எனக்கு ஜோடியாக உபாசனா நடிக்கிறார். இந்தப் படத்தின் டைரக்டர் சந்தீப் சாயும், நானும் 6 வருடங்களாக நட்புடன் பழகி வருகிறோம். அவருடன் அதிகம் பேசியது நானாகத்தான் இருப்பேன். இருவரும் நிறைய சண்டை போட்டு இருக்கிறோம். அவர் எப்போதும் ஒரு சிறந்த நண்பராக இருந்திருக்கிறார். எனக்காக மிக சிறந்த பாத்திரத்தை உருவாக்கி தந்து இருக்கிறார்’’ என்றார்.
அப்போது உணர்ச்சி மிகுதியால் அவர் கண்கலங்கினார்.