விக்ரம் நடித்துள்ள 'மகான்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'மகான்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Update: 2022-02-04 03:39 GMT
சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மகான்'. இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

மகான் திரைப்படத்திற்கு ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். பிப்ரவரி 10-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'மகான்' திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் மகான் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது மகான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்