நட்சத்திர ஓட்டல் உணவுகளை விட தெருவோரங்களில் விற்கும் உணவு தான் பிடிக்கும் - கங்கனா ரணாவத்
நட்சத்திர ஓட்டல் உணவுகளை விட தெருவோரங்களில் விற்கும் உணவு தான் பிடிக்கும் என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
மும்பை,
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து துணிச்சலாக வெளியிட்டு இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார் இந்த நிலையில் நட்சத்திர ஓட்டல் உணவுகளை விட தெருவோர கடைகளில் உள்ள உணவுகளே தனக்கு பிடிக்கும் என்று கங்கனா ரணாவத் கூறினார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நட்சத்திர ஓட்டல் உணவுகளின் ருசியை விட எனக்கு தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளின் சுவைதான் பிடிக்கும், சாலையோரங்களில் கிடைக்கும் உணவு வகைகளை சாப்பிடும் போட்டி வைத்துக் கொண்டால் நான் முதலில் வருவது நிச்சயம்.
படப்பிடிப்புக்காக எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே கிடைக்கும் ஊள்ளூர் உணவு வகைகளை பற்றி தெரிந்து கொள்வேன். அவற்றை வாங்கி ருசியை அனுபவித்து சாப்பிடுவேன். டில்லியில் எனக்கு பிடித்தமான சில தெருவோர கடைகள் உள்ளன.
தனு வெட்ஸ் மானு மற்றும் தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படங்களின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்றபோது தினமும் அங்குள்ள தெருவோர கடையில் ருசியான உணவுகளை வாங்கி சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம்’’ என்று கூறினார்.