ஷாலினி அஜித் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு.... ஏமாந்து ரீடுவீட் செய்த நடிகை
நடிகர் அஜித் மனைவி ஷாலினி டுவிட்டரில் இல்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
நடிகர் அஜித் குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித்தின் பெயரில் புதிதாக டுவிட்டர் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.அதை நம்பி நடிகை யாஷிகா ஆனந்த் ரீடுவீட் செய்து விட்டார்.
நடிகர் அஜித்குமார் சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு அறிவிப்பை வெளியிட வேண்டுமென்றால் கூட மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாகத்தான் அஜித் அறிவிப்பார். இந்நிலையில், ஷாலினி பெயரில் புதிய டுவிட்டர் கணக்கு புதிதாக வலம் வரத் தொடங்யது.
நடிகர் அஜித் மனைவி ஷாலினி டுவிட்டரில் இல்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்து உள்ளார்.
நடிகை ஷாலினியின் பெயரில் உலாவும் டுவிட்டர் கணக்கு பேக் ஐடி தான் என்றும் அவர் டுவிட்டரில் எந்தவொரு கணக்கையும் வைத்திருக்கவில்லை என சுரேஷ் சந்திரா உடனடியாக விளக்கத்தையும் தற்போது அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளார்.