‘மதுரை மணிக்குறவர்’க்காக இளையராஜா பாடினார்
‘மதுரை மணிக்குறவர்’ படத்திற்காக இளையராஜா இசையமைத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க, ராஜரிசி கே. இயக்கி, ஹரிகுமார் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், ‘மதுரை மணிக்குறவர்’. மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட படம், இது. கதாநாயகி, மாதவி லதா.
ராதாரவி, சுமன், சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், பெசன்ட்நகர் ரவி, ஓ.ஏ.கே.சுந்தர், கவுசல்யா ஆகியோருடன் தயாரிப்பாளர் ஜி.காளையப்பனும் நடித்து இருக் கிறார். இளையராஜா இசையமைத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்.