புதிய படத்தில் இணையும் கமல், சிவகார்த்திகேயன்

கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-12-23 12:12 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது டான், அயலான், சிங்கப்பாதை ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

டான், அயலான் படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ராஜ்குமார் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டைரக்டர் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜ்குமார் ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை டைரக்டு செய்துள்ளார்.

இப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு இயக்குனராக பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் படப்பிடிப்பில் கமல்ஹாசனிடம் ராஜ்குமார் ஒரு கதை சொன்னதாகவும் அந்த கதை பிடித்துபோய் தனது ராஜ்கமல் பட நிறுவனம் மூலம் தயாரிக்க கமல்ஹாசன் முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்