கார்த்தியின் 'விருமன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

நடிகர் கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Update: 2021-12-22 08:14 GMT
சென்னை,

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ள 'விருமன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. 

குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இறுதி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விருமன் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்