மலையாள டைரக்டர் இயக்கி தயாரிக்கும் படத்தில், யோகி பாபு

மலையாள திரையுலகில், முன்னணி டைரக்டர்களில் ஒருவர் யோகி பாபுவை வைத்து ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்குகிறார்.

Update: 2021-12-18 12:17 GMT
மலையாள திரையுலகில், முன்னணி டைரக்டர்களில் ஒருவரான ரெஜிஸ் மிதிலா, யோகி பாபுவை வைத்து ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்குகிறார். இது, ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி ஆகியோரும் படத்தில் பங்குபெறுகிறார்கள். சென்னை மற்றும் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்