கார் பந்தயத்தில் கலந்து கொண்டார்; அஜீத் பாதையில், நடிகர் ஜெய்

நடிகர் அஜீத் சினிமாவில் கதாநாயகனாக இருப்பது போல், கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடைய பாதையில் நடிகர் ஜெய்யும் கார் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

Update: 2021-12-18 11:57 GMT
“நான் ஒரு கார் பைத்தியம். கார்கள் மீது தீராத மோகம் கொண்டவன். கார் சேகரிப்பில் ஆர்வம் உள்ளவன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது காதல் கொண்டவன். கார் பந்தயத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறேன். சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டேன்.

இந்த கார் பந்தயம், சென்னையில் 3 நாட்கள் நடைபெற்றது.

இதற்கான தகுதி சுற்று கடந்த 11-ந் தேதி நடந்தது. பந்தயமும் அன்றே தொடங்கியது. மறுநாளும் பந்தயம் நடந்தது. வழக்கமாக இந்தியா முழுவதும் சென்னை, கோவை, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கும். இந்த ஆண்டு முழுக்க முழுக்க சென்னை மைதானத்தில் நடைபெற்றது. அது ஒரு அழகான தருணமாக இருந்தது”.

மேலும் செய்திகள்