தமிழில் பேசினால் அழகாக இருக்கும்" புஷ்பா பட விழாவில் - அல்லு அர்ஜூன்
தமிழில் பேசினால் அழகாக இருக்கும் என சென்னையில் புஷ்பா பட விழாவில் அல்லு அர்ஜூன் கூறினார்.
சென்னை
சென்னையில் நடைபெற்ற 'புஷ்பா' படக்குழு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் அல்லு அர்ஜூன் கூறியதாவது:-
நான் தமிழ்நாட்டில் பிறந்து 20 வருடங்கள் இங்குதான் வாழ்ந்தேன்; நல்ல படத்தோடு இங்கு வரவேண்டும் என்பதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். நான் பேசும் தமிழ் தவறாக இருந்தாலும் தமிழில்தான் பேசுவேன், அதுதான் அழகாக இருக்கும். சென்னையில் பிறந்தவன் நான், தமிழகத்தில் என் படம் வெற்றி பெற்றால்தான் சாதித்தது போல் உணர்வேன்.தெலுங்கு பேசுற தமிழ் பையன் என என்னை என் நண்பர்கள் அழைப்பார்கள்.