என்னை காயப்படுத்திய சம்பவம் - நடிகை நித்யா மேனன்

பிரபல நடிகையாக இருக்கும் நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னை காயப்படுத்திய சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.;

Update: 2021-12-13 14:35 GMT
நித்யா மேனன் தமிழில் 2 படங்களிலும் தெலுங்கு மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து நித்யாமேனன் அளித்துள்ள பேட்டியில், ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பு நான் தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது பிரபாஸ் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பிரபாஸ் யார் என்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்ததை சர்ச்சையாக்கினர். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது. அந்த நேரத்தில் அவர் பாகுபலி நடிகரும் இல்லை. அதனால் அவர் எனக்கு தெரியாது என உண்மையை சொன்னேன். ரசிகர்கள் என்னை பயங்கரமாக விமர்சித்தனர். இந்த சம்பவம் நடந்து பத்து ஆண்டு ஆனபோதிலும் என்னால் மறக்க முடியவில்லை. 

சினிமா துறையில் அப்போதுதான் அடியெடுத்து வைத்த எனக்கு இது பெரிய அடி. இந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது. சிறு வயதிலிருந்தே எனக்கு போட்டி என்றால் பயம். தனியாக பாட வேண்டும் என்றால் பயம். எல்லோரோடும் சேர்ந்து பாட பிடிக்கும். நான் நம்பர் ஒன் ஆக வேண்டும் என நினைத்ததில்லை. பெரிய கதாநாயகி என்ற பெயர் எனக்கு வேண்டாம். இப்படியே எனக்கு நன்றாக இருக்கிறது.எனக்கு கிடைத்ததை வைத்து சந்தோஷமாக இருக்க தெரியும். நான் என்னை மாதிரி தான் இருப்பேன். ஏதேதோ செய்ய வேண்டும் என நினைத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவேன். பெரிய இடம் வேண்டும் என நான் எப்போதும் நினைத்ததே இல்லை. எனக்கு பிடித்ததை நல்லபடியாக செய்ய வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்ப்பேன்” என்றார்

மேலும் செய்திகள்