ராஷிகன்னாவின் காதல் அனுபவம்
நடிகை ராஷி கன்னா தனது காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள், ஜெயம்ரவி ஜோடியாக அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா, விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தற்போது கார்த்தியுடன் சர்தார், தனுஷ் ஜோடியாக திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ராஷி கன்னா தனது காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, ‘
‘இந்த உலகம் சுழல்வது காதலினால்தான். அதுதான் மனித குலத்திற்கு ஆக்சிஜன் மாதிரி. காதலை கவுரவிப்பவர்கள் மட்டுமே மற்ற உறவுகளையும் மதிப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. ஆனால் காதல் முதல் பார்வையிலேயே வந்து விடும் என்பதை நம்ப மாட்டேன். முதல் பார்வையிலேயே காதலிப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம். வெளியே நிறைய கணக்குகள் உள்ளன.
ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்வதற்கும் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்படுவதற்கும் கொஞ்ச காலம் தேவைப்படும். எனக்கும் ஒரு காதல் கதை உள்ளது. எனது 16-வது வயதிலேயே ஒரு பையனை காதலித்தேன். அது காதல் அல்ல கவர்ச்சி மட்டும்தான் என தெரிந்து கொள்வதற்கு ரொம்ப காலம் ஆகவில்லை. அதிலிருந்து உடனடியாக வெளியே வந்துவிட்டேன்’’ என்றார்.