'திரௌபதி' டைரக்டரின் இயக்கத்தில் நடிக்கும் செல்வராகவன்..!

'திரௌபதி' திரைப்படத்தின் டைரக்டரின் அடுத்த படத்தில் டைரக்டர் செல்வராகவன் நடிக்க இருக்கிறார்.

Update: 2021-12-05 12:24 GMT
சென்னை,

'திரௌபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. 'ருத்ரதாண்டவம்' திரைப்படத்தில் டைரக்டர் கவுதம் வாசு தேவ் மேனனை இயக்கியிருந்த மோகன் ஜி தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படமான சமூகப்பிரச்சினையை பற்றிக் கூறும் திரில்லர் கதையில் டைரக்டர் செல்வராகவனை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடலூர், சேலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக தெரிவித்து உள்ளார். டைரக்டர்களை இயக்குவது எளிமையாக இருப்பதாகவும் டைரக்டர்கள் நடிகர்களாக மாறும்போது நடிப்பில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வருவதாகவும் அதனாலேயே டைரக்டர்களை இயக்க விருப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டைரக்டர் செல்வராகவன் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் 'சாணிக் காயிதம்' திரைப்படத்தின் டிரைலரை பார்த்து அவரை தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு அணுகியதாகவும் கதை செல்வராகவனுக்குப் பிடித்திருந்ததால் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பெயரிடப்படாத இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருக்கான தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பரூக் ஜே பாஷா இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

டைரக்டர் செல்வராகவன் தற்போது விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்