‘திரிஷ்யம்-2’ படத்தில் சுஜா வருணி
‘திரிஷ்யம்-2.’ இந்த படத்தில் சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இருக்கிறார்.
வெங்கடேஷ்-மீனா நடிப்பில் தயாராகி தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘திரிஷ்யம்-2.’ இந்த படத்தில் சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இருக்கிறார். இவருடைய கடின உழைப்புக்கு மரியாதை கிடைத்து இருக்கிறது.
சுஜா வருணி ஒரு யூடியூப் சேனலையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவருக்கு நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். இதேபோல் தமிழ் பட வாய்ப்புகளும் தன்னை தேடிவரும் என்று எதிர்பார்க்கிறார்.