சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி

குஜராத் மாநிலத்தில் சுகாதார துறை மந்திரியாக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி மற்றும் அவரது நண்பர்கள் இரவு நேரத்தில் காரில் வெளியே சுற்றினர்.

Update: 2020-07-14 04:43 GMT
 ரோந்து சென்ற பெண் போலீஸ் அவர்களை கைது செய்தார். உடனே பிரகாஷ் கனானி தான் மந்திரி மகன் என்று தெரிவித்து பெண் போலீசை மிரட்டினார். இந்த சம்பவம் பரபரப்பானது.

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் பெண் போலீஸ் சுனிதாவை இடமாற்றம் செய்துவிட்டனர். இதனால் வேதனையான சுனிதா விடுமுறையில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பெண் போலீசுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக பலரும் கண்டித்து வருகிறார்கள்.

நடிகை டாப்சியும் தனது டுவிட்டர் பக்கத்தில், “சினிமா படம் தயாரிப்பதை நிறுத்தி இருக்கிறோம். நமக்கு அதை ஈடுகட்டும் வகையில் நிஜத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன” என்று பதிவிட்டு ஆட்சியாளர்களை சாடி உள்ளார். சமீபத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து குடியுரிமை, மதசார்பின்மை உள்ளிட்ட சில பாடங்களை நீக்கியதற்கு டாப்சி, “இவையெல்லாம் நமக்கு எதிர்காலத்தில் தேவைப்படாதவையா? கல்வியில் சமரசம் செய்தால் எதிர்காலம் இல்லை”என்று கண்டித்து இருந்தார்.

மேலும் செய்திகள்