5 மொழிகளில் தயாராகிறது; வடிவுடையான் டைரக்‌ஷனில் திகில் கலந்த ‘பாம்பாட்டம்’

காக்க காக்க, திருட்டுப் பயலே, நான் அவனில்லை ஆகிய படங்களில் நடித்த ஜீவன், அடுத்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘பாம்பாட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

Update: 2020-01-03 01:00 GMT
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் தயாராகிறது.

ஜீவனுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி முடிவாகவில்லை. முன்னணி நடிகர்-நடிகைகளும் பங்கேற்கிறார்கள். ஜீவன் நடிக்கும் முதல் திகில் படம், இது. தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.

‘பாம்பாட்டம்,’ திகில் கலந்த படம். படத்தை பற்றி டைரக்டர் வி.சி.வடிவுடையான் கூறியதாவது:-

‘‘இதுவரை பார்த்திராத திகில் படம், இது. விறுவிறுப்பான திரைக்கதை. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்குகிறேன். 5 மொழி படங்களிலும் முன்னணி நடிகர்-நடிகைகள் பங்கேற்பார்கள். கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜீவன், இந்த படத்தின் கதையை கேட்டவுடன் நடிக்க சம்மதித்தார். படத்தில் நிறைய ‘கிராபிக்ஸ்‘ காட்சிகள் இடம் பெறுகின்றன.,

யுகபாரதி பாடல்களை எழுத, அம்ரீஷ் இசையமைக்கிறார். 6.2, ஓரம்போ, வாத்தியார் ஆகிய படங்களை தயாரித்த வி.பழனிவேல், இந்த படத்தை தயாரிக்கிறார். பண்ணை இளங்கோவன் இணை தயாரிப்பில், படம் வளர இருக்கிறது. சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.’’

மேலும் செய்திகள்