விஷ்வ பாரதி நிறுவனத்தில் வேலை
விஸ்வபாரதி நிறுவனத்தில் 709 காலியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் 16 மே 2023 வரை படிவத்தை விண்ணப்பிக்கலாம்.;
மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விஷ்வ பாரதி நிறுவனத்தில் பதிவாளர், நிதி அதிகாரி, நூலகர், துணை பதிவாளர், தணிக்கை அதிகாரி, உதவியாளர், தட்டச்சர், நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், உதவி என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர், தொழில் நுட்ப உதவியாளர், பாதுகாப்பு ஆய்வாளர், கணினி ஆய்வாளர், சிஸ்டம் புரோகிராமர் உள்பட 709 கற்றல் அல்லாத பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவியின் தன்மைக்கேற்ப 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பி.இ., பி.டெக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு, திறனறி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-5-2023.
விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://vbharatirec.nta.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.