பாதுகாப்பு அகாடெமியில் பணி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடெமி (ராணுவம், கடற்படை, விமானப்படை), கடற்படை அகாடெமி ஆகியவற்றில் 395 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.;
12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். எனினும் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
2-1-2005-ம் ஆண்டுக்கு முன்பாகவோ, 1-1-2008-ம் ஆண்டுக்கு பின்பாகவோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-6-2023. தேர்வு நடைபெறும் நாள்: 3-9-2023. விண்ணப்பிக்கும் முறை பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://upsc.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.