'டைப்-ஏ' ஆளா நீங்கள்?

பொறுமையின்மை, கோபம், ஆக்ரோஷம், நேரந்தவறாமை, வேகம் ஆகியவை கொண்டவர்களை ‘டைப்-ஏ’ எனவும், ரிலாக்ஸாக வேலை செய்பவர்களை ‘டைப்-பி’ எனவும் குறிப்பிடுகிறார்கள்.;

Update:2023-09-24 16:20 IST

இந்த வரையறைக்கு காரணமானவர்கள், மேயர் ப்ரீட்மன் மற்றும் ரே ரோஸ்மன். இவர்கள் இருவரும் 1959-ம் ஆண்டில் மிகப்பெரிய கள ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மனிதர்களை இருபிரிவாக பிரித்தனர். இதில், 'டைப்-ஏ' பிரிவினர், தீவிரமான போட்டியாளர்களாகவும், நிதானமற்ற செயல் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என வரைமுறைப்படுத்தினர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்...? 'டைப்-பி' பிரிவினரை விட, 'டைப்-ஏ' பிரிவினருக்கு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறதாம். ஏனெனில், 'டைப்-ஏ' பிரிவினர், எப்போதுமே பதற்றத்துடன் இருப்பதால், அவர்களது இதயம் சுலபமாகவே பாதிக்கப்பட்டுவிடும் என்பது, இவர்களது கருத்து. இதை, மருத்துவ உலகமும், பெரும்பாலான அலுவலகங்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதனால்தான், தங்களது பணியாளர்களது நலன் கருதி, வேலைகளை பதற்றம் இல்லாத முறையில் முடித்துக்கொடுக்க, வழிகாட்டுவதோடு பணியாளர்களை டைப்-ஏ, டைப்-பி என பிரித்து, அவர்களது உடல்நலனில் அக்கறையும் காட்டுகிறார்கள்.

நீங்களும், டைப்-ஏ ஆளாக இருந்தால், பரபரப்பான வேலைகளை பதற்றத்துடன் செய்தால்... இதயத்தை பத்திரமாகக் கவனித்து கொள்ளுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்