சுகாதார பணியாளர் பணி

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் சுகாதார ஆய்வாளர் (கிரேடு 2) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1066 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.;

Update:2023-07-16 20:41 IST

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சுகாதார பணியாளர், ஆய்வாளர் பணி சார்ந்த இரண்டு ஆண்டு படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

1-7-2023 அன்றைய தேதிப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் சுகாதார பணி சார்ந்த படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-7-2023. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://mrbonline.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்