தகவல் தொழில்நுட்பத்தின் வரப்பிரசாதம் 'பைபர் ஆப்டிக்'

Update:2023-08-05 17:18 IST

பைபர் ஆப்டிக் இழைகளில் உருவான விளையாட்டு பொருட்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவை விளையாட்டு பொருட்கள் அல்ல. அவைதான், கடந்த 10 வருடங்களாக தகவல் தொழில்நுட்பத்தின் வரப் பிரசாதமாக விளங்கும், 'பைபர் ஆப்டிக்' இழைகள்.

கண்ணாடியின் மிக மெல்லிய இழைகளிலிருந்து உருவாக்கப்படுபவையே 'பைபர் ஆப்டிக்' எனப்படும் கண்ணாடி இழைகள். சில சமயம் இது பிளாஸ்டிக்கில் இருந்தும் உருவாக்கப்படுகிறது.

வெளிப்புறத்தில் இது சாதாரண பிளாஸ்டிக் பைப் போலத்தான் இருக்கும். ஆனால் இதன் உட்பகுதி முற்றிலுமாக ஒளியைப் பிரதிபலிக்கும்படி பளபளவென்று அமைக்கப்பட்டிருக்கும்.

இதன் ஒருபுறம் செலுத்தப்படும் ஒளி, கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்த முனையை அடைகிறது. சாதாரண கம்பி வயர்களோடு ஒப்பிட்டால், இந்த வேகம் பல மடங்கு அதிகம். எனவேதான் இன்று டி.வி, ரேடியோ, மற்றும் இணையத் தொடர்புகள் யாவும் ஒளி சமிக்ஞைகளாக மாற்றப்பட்டு 'பைபர் ஆப்டிக்' கேபிள்கள் வழியே பரிமாறப்படுகிறது.

பைபர் ஆப்டிக் தொழில்நுட்பத்தை சிங்கிள் மோட், மல்டி மோட் என்று இரு வகையாகப் பிரிக்கிறார்கள். இவற்றில் மல்டி மோட் இழைகள் உள்ளீடுகளை அகலமாக வெளிப்படுத்து வதால், இவை மிகக் குறைந்த தூரத் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே உதவுகின்றன.

சிங்கிள் மோட் இழைகள் தனக்குள் இடப்பட்ட உள்ளீடுகளை சிந்தாமல் சிதறாமல் துல்லியமாக வெளிப்படுத்துவதால் மிக அதிக தூரப் பரிமாற்றத்துக்கு இதுவே பயன்படுகிறது.

சுமார் 111 ஜி.பி அளவுள்ள தகவல்களை ஒரே விநாடியில் கடத்தக் கூடிய இந்தத் தொழில்நுட்பத்தால்தான், பிராட்பேண்ட், 3-ஜி போன்ற சேவைகளை நாம் பெற முடிந்தது.

இதற்கு அடுத்தபடியாக, வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், வயர் இணைப்பு முறையில் மிகவும் மலிவான, எளிமையான முறையாக, பைபர் ஆப்டிக் மட்டுமே தனித்திருக்கிறது.

இந்த பைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் ஏதோ ஒருவரால் ஒரே நாளில் கண்டு பிடிக்கப்பட்டதல்ல. பல பேர், பல நாடுகள் என்று இந்த ஆராய்ச்சியின் கரங்கள் நீள்கின்றன. இன்னும் கூட மின்சார வயர்களுக்கு பதில் இந்த பைபர் ஆப்டிக் குழாய்களைப் பயன்படுத்த முடியுமா என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

நம் வீடுகளிலும் ரோடுகளிலும் குறுக்கும் நெடுக்குமாகப் பல வயர்களைப் பார்த்திருப்போம். அந்தக் குளறுபடிகளையெல்லாம் களைந்துவிடக் கூடியது இந்த பைபர் ஆப்டிக் தொழில்நுட்பம்.

Tags:    

மேலும் செய்திகள்