'டாட்டூ' வரைந்ததற்கு பிறகான பராமரிப்புகள்

கைகளிலும், உடல் பாகங்களிலும் விதவிதமான உருவங்கள் பொறிக்கப்பட்ட டாட்டூக்களை பதித்துக்கொள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.;

Update:2023-10-01 17:46 IST

அவர்களின் ரசனைக்கேற்ப கறுப்பு நிறம் மட்டுமின்றி வண்ணமயமான நிறக்கலவையிலும் டாட்டூக்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை முறையாக பராமரிக்காவிட்டால் சில மாதங்களிலேயே பொலிவை இழக்க தொடங்கிவிடும். டாட்டூக்களை முறையாக பராமரிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

* டாட்டூக்கள் வரைந்த பிறகு ஒரு வாரம் கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். நீச்சல் பயிற்சி மேற்கொள்வதோ, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதோ கூடாது.

* மதுப்பழக்கம் கொண்டவர்கள் மூன்று, நான்கு நாட்களாவது மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மதுவில் இருக்கும் ஆல்ஹகால் ரத்தத்தில் கலந்து டாட்டூக்களின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

* ஒரு வாரம் கழித்து 'டாட்டூ வேக்ஸ்' எனப்படும் மாய்ஸ்சுரேசரை கொண்டு மசாஜ் செய்து வருவது நல்லது. அது டாட்டூக்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

* சூரிய கதிர்கள் டாட்டூக்களுக்கு எதிரானவை. அவை டாட்டூக்கள் மீது நேரடியாக படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* சூரிய கதிர்களிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் டாட்டூக்களின் நிறத்தை இழக்க செய்துவிடும். டாட்டூக்கள் மூலம் ஊடுருவி சருமத்திற்கும் கேடு விளைவிக்கும்.

* உடலில் டாட்டூக்கள் வரைந்திருப்பவர்கள் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. அவை டாட்டூக்களில் உராய்வை ஏற்படுத்தி அதன் நிறத்தை மங்கச் செய்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்