பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
இந்திய தர கவுன்சில் (கியூ.சி.ஐ.) மூலம் காப்புரிமை, வடிவமைப்பு குழு சார்ந்த பதவிகளில் 553 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.;
பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4-8-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-8-2023.
https://qcin.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.