தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி) மூலம் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் 750 சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 1.7.2023 தேதியின்படி 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 1-7-1993 அன்றைய தேதிக்கு பின்போ 1-7-2003-க்கு முன்போ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு. தமிழ் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-6-2023.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://tnusrb.tn.gov.in/ என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.