மன்னர்கள் சாப்பிட்ட 'மைசூரு மல்லி'
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் ரகங்களில் ’மைசூரு மல்லி’யும் ஒன்றாகும்.;
தமிழகத்திலும் இந்த ரகம் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முற்காலத்தில் மன்னர்களுக்கு உணவளிக்க உற்பத்தி செய்திருக்கிறார்கள்.
இந்த ரகத்தை 100 ஆண்டுகளுக்கு மேலாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர். பழுப்பு நிற அரிசி, நடுத்தர ரகம், விரைவாக வேகக்கூடியது. அனைத்து பலகாரங்களுக்கும் ஏற்றது, மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்ற ரகம். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆவது இந்த ரகத்தின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்றது.
மன்னர்கள் சாப்பிட்ட நெல் ரகமாக இருந்தாலும் சாதாரண குடிமகனும் இந்த ரகத்தை சாப்பிடும் வகையில் தமிழக உழவர்கள் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள்.